Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 67 படத்தில் நடிகராக களம் இறங்கும் டான்ஸ் மாஸ்டர். வைரலாகும் அறிவிப்பு

thalapathi-67-movie-latest-character details

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். தற்போது இப்படத்தில் இணைந்திருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட்களை தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது தளபதி 67 திரைப்படத்தில் பிரபல முன்னணி நடன இயக்குனரான சாண்டி மாஸ்டர் இணைந்து இருப்பதாக புதிய போஸ்டரை அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக சாண்டி மாஸ்டர் இப்படத்தில் நடன இயக்குனராக இல்லாமல் நடிகராக இணைந்து இருப்பதையும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் படம் மீது உள்ள எதிர்பார்ப்பை எதிர வைத்துள்ளது.