தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.
இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் “தளபதி 68” என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே தற்போது புதிய அப்டேட்டாக தளபதி 68 திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் உரிமத்தை T-Series என்னும் பிரபல நிறுவனம் இதுவரை யாரும் வாங்காத அதிகபட்ச விலையான ரூ.26 கோடிக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கும் தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Thalapathy68 audio rights signed by
T-Series for 26crs 🔥🔥🔥Highest Ever Tamil Movie Audio Rights Deal pic.twitter.com/Vghvo8jLPN
— Karthik Ravivarma (@Karthikravivarm) July 16, 2023