ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் தளபதி விஜய் அவர்கள் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் பனையூரில் உள்ள மக்கள் மன்ற அலுவலகத்தில் ரசிகர்களை நடிகர் விஜய் மீண்டும் சந்தித்துள்ளார். அங்கு ரசிகர்கள் அனைவருடனும் தனித்தனியாக புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். அப்போது விஜயை பார்க்க மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் வந்திருந்தார். அவரை நடிகர் விஜய் தனது கைகளால் தூக்கிப்பிடித்து கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த உணர்ச்சிகரமான புகைப்படம் ரசிகர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. தற்போது இந்த அழகான புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகியும் வருகிறது.
My man @actorvijay ❤️💯 Love for his fan's never ends #varisu #Thalapaathy67 ❤️💯😍🥺🫰 pic.twitter.com/ANXpugetVP
— ⚡vivin 🇮🇳 (@vivinmass) December 13, 2022