Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

+2 மாணவர்களுக்கு பரிசு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விஜய். வைரலாகும் தகவல்

thalapathi-vijay latest update

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தற்போது சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் குறித்த புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் விஜய், மாவட்டந்தோறும் +2 தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்களுக்கு நேரில் அழைத்து பரிசு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக விஜய் மக்கள் இயக்கம் மன்றத்தினரிடம் விவரங்களை சேகரிக்க கூறி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் வெளியானதும் அவர்களிலும் மாவட்டம் தோறும் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களின் விவரங்களை சேகரிக்குமாறு கூறியுள்ளாராம். இவரது இந்த செயல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.