கோலிவுட் சினிமாவில் மாபெரும் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
காஷ்மீரில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவரது படப்பிடிப்பை நிறைவு செய்ததாக படக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யும் தனக்கான படப்பிடிப்புகளை நிறைவு செய்துவிட்டு காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பி இருப்பதாக புதிய தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.