Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக 2 ஹீரோயின்கள்?

Thalapathy 65 2 heroine paired with Vijay

நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில், தளபதி 65 படத்தில் மற்றுமொரு ஹீரோயினும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த இன்னொரு ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.