Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 65 அறிவிப்பு.. விஜய் போட்ட முட்டுக்கட்டை, அறிவிப்பு வெளியாகாதததற்கு இதுதான் காரணம் – வெளியான அதிர்ச்சி தகவல்.!!

 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவலால் ஏப்ரல் மாதமே ரிலீசாக இருந்த இந்த படம் தொடர்ந்து தள்ளி போனது.

இந்த படத்தை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என கூறப்பட்டு வந்தது.

தகவல் வெளியான அன்று விநாயகர் சதுர்த்தியன்று தளபதி 65 படம் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு போன் செய்து முருகதாஸ் என்னிடம் பாதி கதையை தான் கூறியுள்ளார். மீதி கதையை கூறி முடித்த பிறகு முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுங்கள் என கூறி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தான் தளபதி 65 படத்திற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.