இளைய தளபதி விஜய் தன்னுடைய 64வது படமான மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டார். படத்தின் ரிலீஸிற்காக தான் படக்குழு வெயிட்டிங்.
எப்போது ரிலீஸ் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் தான் தளபதியின் 65வது படம் குறித்து தகவல்கள் வர ஆரம்பித்தன. முருகதாஸ் தான் இயக்குவதாக இருந்தது, ஆனால் அவர் வெளியேறிவிட்டார்.
அடுத்ததாக பேரரசு பெயர் அடிபட்டது, ஆனால் அவரும் இல்லை என்கிறார்கள். இப்போது வரும் புது தகவல் என்னவென்றால் இளம் இயக்குனர் நெல்சன் விஜய் படத்தை இயக்குகிறார் என புதிய தகவல்கள் வருகின்றன.
ஆனால் உண்மையில் எது உண்மை என்பது தெரியவில்லை, இதுவும் வதந்தியாக கூட இருக்கலாம் என்கின்றனர்.