Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘தளபதி 65’ அப்டேட் – விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது இவர்தானாமே?

‘Thalapathy 65’ update - Is he going to act as a partner for Vijay

நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். நடிகை பூஜா ஹெக்டே பிரபாஸுடன் நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.