Tamilstar
News Tamil News

தளபதி 65 குறித்து முதன் முறையாக விளக்கம் கொடுத்த தமன்

vijay

தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரங்களில் டாப்பாக இருப்பவர் தளபதி விஜய். இவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எப்போதும் அதிகமாக இருக்கும்.

மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள தளபதி விஜய். அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எனும் அறிவிக்கப்படவில்லை.

ஆனாலும் இவரின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்குவார் என கிசுகிசுக்க பட்டது. மேலும் அதில் இசையமைப்பாளர் S.S.தமன் பணியாற்றவுள்ளார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் S.S.தமன் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றின் நேரடி பேட்டியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது நடிகர் விஜய்யின் திரைப்படத்தில் இணைவுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த தமன் “தளபதி விஜய்யின் திரைப்படத்தில் இசையமைக்க ஆர்வமாக உள்ளேன். கடந்த மூன்று வருடங்களாக அவரின் திரைப்படத்தில் பணியாற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் தற்போது தான் வாய்ப்பு கிடைத்துள்ளது” என கூறியுள்ளார்.