தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடந்து வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் தளபதி 66 திரைப்படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
SVC கிரியேஷன் சார்பில் தயாராகும் இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் தளபதி 66 குறித்த அப்டேட்ஸை கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது “வம்ஷி அழகான ஒன்லைனோடு வந்தார். கதையைக் கேட்டபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விஜய் கதையைக் கேட்ட பிறகு, `இது போல ஒரு கதையை அவர் 20 வருடங்களாக கேட்டதில்லை’ என்றார். ஒரு பெரிய ஸ்டார் இந்த வார்த்தைகளைக் கூறும்போது அது ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும்.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கவுள்ளது. கோவிட் காரணங்களால் தாமதமாகவில்லை என்றால் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும். தீபாவளிக்கு வெளியாகவில்லை என்றால் 2023 பொங்கலுக்கு வெளி வரும்” எனத் தெரிவித்துள்ளார்.