Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘தளபதி 66’ அப்டேட் – முதன்முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்

‘Thalapathy 66’ update - Famous composer joins Vijay for the first time

நடிகர் விஜய்யின் 66-வது படத்தை வம்சி பைடி பல்லி இயக்க உள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் இவர், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘தளபதி 66’ படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘தளபதி 66’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, தற்போது ஷங்கர் இயக்கும் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்திற்கும் தமன் தான் இசையமைத்து வருகிறார். ஆதலால் தளபதி 66 படத்துக்கு அவர் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Famous composer joins Vijay for the first time
Famous composer joins Vijay for the first time