கோலிவுட் திரையுலகில் பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் இளைய தளபதி விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து ரஷ்மிகா மந்தனா, யோகி பாபு, பிரபு, சரத்குமார், சங்கீதா, ஷாம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்து எந்த ஒரு உறுதியான அறிவிப்பும் இதுவரை வெளிவராமல் இருக்கும் நிலையில் இப்படத்தில் இணைய இருக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு இருக்கும் தளபதி 67 திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பு வரும் டிசம்பர் மாதம் எதிர்பார்க்கலாம் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, அவர் விஜயின் வாரிசு திரைப்படம் குறித்த முறையான அறிவிப்பு இன்னும் வெளியாகாததால், தளபதி 67 பற்றிய அறிவிப்பை தற்போது வெளியிட முடியாது என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் வரும் டிசம்பர் மாதத்தில் தளபதி 67 படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறியிருக்கிறார். இவர் கூறியிருக்கும் இந்த தகவல் தற்போது இணையத்தில் பயங்கர வேகமாக பரவி வருகிறது.
December ???? #Thalapathy67 @actorvijay @Dir_Lokesh @7screenstudio pic.twitter.com/CMpDCaB4Eq
— Vijay Fans Trends (@VijayFansTrends) October 26, 2022
