தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படம் உருவாக்கியுள்ளது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
மாஸ்டர் படத்தை தயாரித்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது படத்தின் புதிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது, தளபதி 67 திரைப்படத்திற்கான பூஜை டிசம்பர் 5ஆம் தேதி காலை நடைபெற்றதாகவும். டிசம்பர் 6 ஆம் தேதி இப்படத்திற்கான போட்டோ சூட் நடைபெறும் என்றும், டிசம்பர் 7 முதல் 9 ஆம் தேதி வரை படத்திற்கான ப்ரோமோ ஷூட் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரவபூர்வமான அறிவிப்பை படக்குழு விரைவில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
• Pooja Done Today
• Photoshoot Tomorrow (DEC 6)
• 3 Days Promo Shoot (DEC 7 to 9)Directed By #LokeshKanagaraj#ThalapathyVijay | #Anirudh
— Saloon Kada Shanmugam (@saloon_kada) December 5, 2022