தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிர்வாகத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வரும் நிலையில் தற்போது அது குறித்த தகவல் என்று வெளியாகி உள்ளது.
முதல் முறையாக தளபதி விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. வேலை விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதால் இன்னொரு நாயகியாக நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன்னதாக நடிகர் விஜய் அப்பா, மகன் என பிகில் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
