தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து விட்டு சினிமாவுக்கு டாட்டா காட்டி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.
தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின. தெறி, கத்தி, பிகில் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி அமைய இருப்பதாக தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில் சமந்தா சமீபத்தில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு வாயுவை சுவாசித்தால் காய்ச்சல் குணமாகும் என மருத்துவர் ஒருவர் பரிந்துரை செய்ததாக வீடியோ வெளியிட்டு இருந்தார். இது தவறான மருந்து, அமெரிக்க ஆஸ்துமா பல்கலை கழகம் தடை செய்த மருந்து இது என டாக்டர் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். தவறான மருந்தை பரப்பும் சமந்தாவை கைது செய்ய வேண்டும் என்று சொல்ல சமந்தா அவருக்கு திருப்பி பதிலடி கொடுப்பது என இவர்களது வாக்குவாதம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் தளபதி 69 டீம் சமந்தாவை மாற்ற முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமந்தாவுக்கு பதிலாக நயன்தாரா அல்லது காஜல் அகர்வாலை நடிக்க வைக்கலாம் என ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.