தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துவரும் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடிக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் தளபதி விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் மூலம் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால் தளபதி 69 திரைப்படம் இவரது கடைசி படமாக அமைய உள்ளது.
எச் வினோத் இந்த படத்தை எப்படி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் பல தமிழ் தயாரிப்பாளர்கள் படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் தளபதி விஜய் 200 முதல் 250 கோடி வரை சம்பளம் கேட்பதால் தற்போது தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்து ஜகா வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
இதனால் புதிய தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தளபதி விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
