தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு கடுமையாக டஃப் கொடுக்கும் நடிகர் என்றால் அது அஜித் தான். இதை யாராலும் மறுக்க முடியாது.
இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் பார்க்க பல ரசிகர்களுக்கு ஆசையுண்டு. ஆனால் அந்த ஆசையெல்லாம் நிறைவேறுமா என்பது கேள்விக்குறி தான்.
தல அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தில் அஜித்துடன் ஆக்சன் கிங் அர்ஜூன் இணைந்து நடித்திருப்பார்.
இந்தப் படத்தைப் பார்த்து விட்டு தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் அர்ஜுன் நடித்த ரோலை என்னிடம் சொல்லி இருக்கலாம். நானே நடிச்சிருப்பேன் என கூறி அந்த படத்தையும் பாராட்டியுள்ளார்.
இதனை இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.