Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜ் பற்றி விஜய் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்.. காமெடி நடிகர் ஓபன் டாக்

thalapathy vijay-about-lokesh-kanagaraj-carrier

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். இரண்டு படங்களின் வெற்றியால் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்த நேரத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த தீனா தளபதி விஜய் லோகேஷ் குறித்துப் பேசிய வார்த்தைகளை பதிவு செய்துள்ளார்.

தீனா ஒரு பேட்டியில் விஜய் சார் ரொம்ப ஜாலியாக பேசுவார் அப்படி ஒருநாள் இவன் எப்படிடா சினிமாவுக்குள்ள வந்தான்? இயக்குனர் ஆக வேண்டும் என்றால் யாரிடமாவது உதவி இயக்குனராக பணியாற்றிய இருக்க வேண்டும். இல்லையென்றால் குறும்படம் ஏதாவது இயக்கி இருக்க வேண்டும். ஒரு நான் லீனியர் படத்தை எடுத்துவிட்டு அதன் பிறகு எப்படி படங்களாக இயக்குகிறான்.

எனக்கு டயலாக் இன்னும் கொடுக்க மாட்டுகிறான். ஸ்பாட்ல வந்து எழுதிக் கொடுக்கிறான் என கூறியதாக தெரிவித்துள்ளார். விக்ரம் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார் தளபதி விஜய்யை வைத்து உருவாகி உள்ள படத்தை தான் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

thalapathy vijay-about-lokesh-kanagaraj-carrier
thalapathy vijay-about-lokesh-kanagaraj-carrier