தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். அதிக பொருள் செலவில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரும் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் நடிகர் விஜய் மற்றும் மகேஷ் பாபு நடிக்க இருந்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார் படத்தின் எழுத்தாளர் ஜெயமோகன்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் பொன்னியின் செல்வன் படத்தில் தளபதி விஜய் வந்தியதேவன் கதாபாத்திரத்திலும் மகேஷ்பாபு அருள்மொழிவர்மன் கதாபாத்திரம் நடிக்க இருந்ததாக தெரிவித்துள்ளார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் இவர்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக தற்போது வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.