விஜய்யுடன் படத்தில் பணியாற்ற வேண்டும் சிலரின் கனவு. வாய்ப்பு கிடைக்குமா என்பது பலரின் ஏக்கம். நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களும் இதில் அடங்குவர்.
ஊரங்கிற்கு முன் வெளியாகி பெரும் கவனத்தை பெற்று நல்ல வசூல் செய்த படங்களில் ஒன்று திரௌபதி. இப்படத்தின் இயக்குனர் மோகன் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். சமூக வலைதளத்தில் சாட் செய்த அவருடன் ரசிகர்கள் விஜய்யுடன் படம் இயக்குவது எப்போது என கேட்டனர்.
அதற்கு அவர் விஜய்க்காக கதை தயாராக இருப்பதாகவும், காலம் கனிந்து வரும் போது நிச்சயம் நடக்கும் என கூறினார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரை நான் சும்மா தான் கேட்டேன், உடனே காலம் இருக்கு, கனி இருக்கு, கதை இருக்குனு சொல்லிட்டு இருக்கீங்க என கேலி கிண்டல் செய்தார். இதற்கு மோகன் சரியான பதிலடி கொடுத்துள்ளதை பாருங்கள்.
நம்மிடம் கேள்வி கேட்பவர்களை சக மனிதனாக மதித்து மறுபதில் கொடுத்தால் அதை வைத்து விளையாடும் கிறுக்கு புத்தி கொண்டவர்களால் தான் பலர் ஒரு குறும்படம் எடுத்தவுடன் தன்னை celebrityஆக நினைத்து பதில் பேச மறுக்கிறார்கள்.. உன்னை மதிப்பதை நீயே கிண்டல் செய்து கொண்டால் நீயே தாழ்ந்த பிறவி..
— Mohan G Kshatriyan 🔥 (@mohandreamer) June 22, 2020