Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அரசியலில் தடம் பதிக்கப் போகும் தளபதி விஜய்.. ரகசியமாக யாரை சந்தித்துள்ளார் தெரியுமா? வைரலாகும் தகவல்

Thalapathy Vijay And Prashanth Kishore Meeting

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் விரைவில் அரசியலுக்கு வர உள்ளார் என தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கேற்றாற்போல படங்களிலும் அரசியல் பேசி வருகிறார்.

மேலும் அரசியலில் நுழைந்தால் தனக்கு எந்த அளவிற்கு ஆதரவு இருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்காக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என இரண்டிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பலர் போட்டியிட்டு நல்ல வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அரசியலுக்கு வர தகுந்த நேரம் இது என விஜய் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக இவர் அரசியல் வல்லுனர் பிரசாந்த் கிஷோர் அவர்களை ஹைதராபாத்தில் ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இது பற்றி எந்தவித புகைப்படங்களும் வெளியாகவில்லை. விரைவில் விஜய் அரசியலில் களம் இறங்குவார் என தகவல்கள் பரவி வந்த வண்ணம் உள்ளன.

Thalapathy Vijay And Prashanth Kishore Meeting
Thalapathy Vijay And Prashanth Kishore Meeting