தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் மாஸ்டர் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இப்படம் கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் விஜய் தன் வரவிருக்கும் தன் பிறந்தநாளுக்கு ஒரு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
இதில் கொரொனா காரணமாக தன் பிறந்தநாளை இந்த வருடம் ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என கூறியுள்ளார்.
அதோடு ரசிகர்கள் எல்லோரும் பாதுக்காப்பாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், விஜய் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் காமென் டிபி, ட்ரெண்டிங் என தயாராகிவிட்டனர்.
அதோடு மாஸ்டர் டீசரை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.