Tamilstar
News Tamil News

விஜய்யின் அடுத்த மாஸான சாதனை!

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் தான் தற்போது ரசிகர்களின் நாடித்துடிப்பாக உள்ளது.

கோடை விடுமுறை ஸ்பெஷலாக கடந்த ஏப்ரல் 9 ம் தேதி வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கு, தியேட்டர் மூடலால் நின்று போனது. தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் இணையதள சாதனைகள் பற்றிய நிறைய சொல்லலாம். பெரிய லிஸ்டாக அது நீண்டுகொண்டே செல்லும். இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி. விஜய் போலிஸாக நடித்திருந்தார்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் இப்படத்தின் பாடல்களும் ஹிட். ஏனா மீனா டீக்கா பாடல் என்ற பாடல் தற்போது Youtube ல் 69 மில்லியன் பார்வைகளை எட்டி சாதனை படைத்துள்ளது.