Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கொடுத்த வார்த்தையை மீறிய விஜய். சர்ச்சை பதிவு வைரல்

Thalapathy Vijay did not keep his word

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலை விஜய்யும் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.

இது குறித்த போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்று இருக்கும் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தளபதி விஜய் சர்க்கார் படத்தின் போது இதே சர்ச்சையில் சிக்கிய போது இனி படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது கொடுத்த வார்த்தை மீறி மீண்டும் புகை பிடிக்கும் காட்சிகள் நடித்திருப்பது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.