இந்திய திரையுலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் காட்சியை கண்டு கழித்த போது விஜய் ரசிகர்கள் சிலர் இடைவெளியில் லியோ, லியோ, லியோ என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய ட்ரெண்டிங்காகி வருகிறது.
Craze for Thalapathy is huge 🦁🥁
LEO
LEO
LEOooooooooo Chant In Jailer FDFS 😨🔥 @RohiniSilverScr @actorvijay 🐐#JailerFDFS #JailerReview pic.twitter.com/rhwlb3srxY— Arun Vijay (@AVinthehousee) August 10, 2023