தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் ஒருவராகவும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதன்மையான நடிகராகவும் விளங்கி வருகிறார் தளபதி விஜய்.
இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ்டர் எனும் படத்தில் நடித்து, அப்படம் வெளிவர காத்திருக்கிறார்.
கொரோனா தாக்கம் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் சற்று தள்ளிப்போய் இருக்கிறது. ஆனால் 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
தளபதி விஜய்யின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ. 355 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தளபதி விஜய் சொந்த வீட்டின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 15 கோடி முதல் ரூ. 20 வரை என கூறுகின்றனர்.