தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல் இயக்குனர் செல்வராகவன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.