Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

thalapathy vijay in leo movie latest update

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார்.

மேலும் இதில் மிஷ்கின், சாண்டி, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், பாபு ஆண்டனி, பிக்பாஸ் ஜனனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் லோகேஷன் எல் சி வில் வருமா வராதா போன்ற பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் உலாவிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தில் பல டாப் சீக்ரட்களை மெயின்டைன் செய்து வரும் படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தரமான அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

அது என்னவென்றால், லியோ படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரம் சிங்கத்தின் குணாதிசயங்களைப் போல் ஒத்து இருக்குமாம். அதனால் அதனை வெளிப்படுத்தும் வகையில் லோகேஷ் சிங்கம் தொடர்பான முக்கிய காட்சிகள் படத்தில் இடம்பெறும் வகையில் தான் திரைக்கதையை அமைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த சிங்கம் தொடர்பான காட்சிகளை CG மூலம் கொண்டு வருவதற்காக ரூ.15 கோடி வரை படக்குழு செலவழித்து இருக்கிறார்களாம். இந்த முக்கிய தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.

thalapathy vijay in leo movie latest update
thalapathy vijay in leo movie latest update