இளைய தளபதி விஜய் இந்த பெயரை சொன்னாலா கொண்டாட்டம் தான். இவரது ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை விஜய்யை ஒரு துளி கூட குறையாமல் ரசிக்கும் ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.
ரசிகர்கள் அனைவரும் இப்போது அவரின் மாஸ்டர் திரைப்படத்திற்காக தான் ஆவலாக வெயிட்டிங். படமும் அடுத்த வருடம் ஜனவரியில் வெளியாகிவிடும் என படக்குழு தரப்பில் கூறுகின்றனர்.
தற்போது பிரபல ஆங்கில வலைதளத்தில் விஜய்யின் செத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய்யின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 375 கோடி என்கின்றனர்.
ஒரு வருடத்தில் மட்டும் விஜய் ரூ. 45 கோடி சம்பாதிக்கிறாராம். இது எந்த அளவிற்கு உண்மை தகவல் என்பது தெரியவில்லை, ஆனால் ஆங்கில வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள விவரம் இதுதான்.