Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அம்மா எடுத்துக் கொடுத்த சட்டையை நிகழ்ச்சியில் அணிந்து வந்த விஜய்.வீடியோ வைரல்

thalapathy vijay-mother-buys-him-a-shirt

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தை முடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள விஜய் அடுத்த முழு நேர அரசியல் ஈடுபட இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதற்கேற்ப தளபதி விஜயும் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தளபதி விஜயின் அண்ணா சோபா சந்திரசேகர் ஆசையாக எடுத்துக் கொடுத்த சட்டையை விஜய் அணிந்து கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இது பற்றிய வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.