தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்காக தான் உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
விஜய் பற்றிய எந்த ஒரு தகவலாக இருந்தாலும் அது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போதும் அப்படி ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. தளபதி விஜய் சென்னை நீலாங்கரையில் இருந்த தன்னுடைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்தப் புதிய வீடு கிட்டத்தட்ட ஹாலிவுட் நடிகரான டாம் கியூரிஸ் வீட்டைப் போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இவர்கள் இருவரின் வீட்டையும் ஒப்பிட்டு புகைப்படம் ஒன்றை உருவாக்கி அதனையும் ஷேர் செய்து வருகின்றனர். தளபதி விஜய் வீட்டைக் கூட காப்பியடித்து கட்டி விட்டார் என ஒரு கூட்டம் கிண்டல் அடித்துக் கொண்டு இருக்கிறது.