தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரின் திரைப்படங்கள் எப்போதும் பெரிய அளவில் வெளியாகும்.
அந்த வகையில் பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, மாஸ்டர் திரைப்படமும் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இவரின் அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவார் என உறுதியாக கூறப்படுகிறது.
மேலும் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் முந்தய படங்களில் திரைக்கதை சரியாக இல்லை என்ற காரணத்தினால்.
தளபதி 65 திரைப்படத்திற்காக பல கதாசிரியர்களுடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதைக்கு மிகவும் மும்மரமாக பணியாற்றி வருகிறாராம்.
மேலும் இப்படத்தின் ஒன் லைன் வேற லெவலில் இருப்பதாகவும், நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் சன் பிக்சர்ஸ் இதிலிருந்து வெளியேறியதாக கூறியது உண்மையில்லை என்றே தெரிகிறது.