Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்.. வைரலாகும் புகைப்படம்

Thalapathy Vijay Pay Respect to Puneet Rajkumar

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் மரணமடைந்தது இந்திய திரை உலகையே அதிர்ச்சி அடைய செய்தது.

புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு உலகம் முழுவதிலிருந்தும் திரையுலகப் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தளபதி விஜய் தற்போது பெங்களூருவில் புனித் ராஜ்குமார் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தளபதி விஜய் அவர்கள் புனித் ராஜ்குமார் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Thalapathy Vijay Pay Respect to Puneet Rajkumar
Thalapathy Vijay Pay Respect to Puneet Rajkumar