தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் திலீப் குமார் படத்தினை இயக்கி உள்ளார்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கேற்றாற்போல சிவகார்த்திகேயனின் வரிகளில் அரபிக் குத்து என்ற பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
ஆனால் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என வருத்தத்தில் உள்ளாராம் பூஜா ஹெக்டே. இந்த விஷயத்தை அறிந்த தளபதி விஜய் தன்னுடைய அடுத்த படத்தில் மீண்டும் வாய்ப்பு தருவதாக தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் விஜயுடன் மீண்டும் ஒரு படத்தில் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

Thalapathy Vijay Promise to Pooja Hegde