Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோட் படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த விஜய், உற்சாகத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

அக்டோபர் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாதியை தளபதி விஜய் பார்த்து விட்டதாகவும் படம் பார்த்த பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் படக் குழுவினரை பாராட்டி தள்ளியதாகவும் சொல்லப்படுகிறது.

தளபதி விஜய்க்கு படம் பிடித்து விட்டது என்றால் நிச்சயம் எங்களுக்கும் பிடிக்கும்.. அப்போ படம் டாப்பு டக்கரு தான் என ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்

Thalapathy Vijay Review for GOAT Movie update
Thalapathy Vijay Review for GOAT Movie update