Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ட்ரி கொடுத்த சஞ்சய் தத். கட்டி அணைத்து வரவேற்ற விஜய்.

thalapathy-vijay-welcoming-sanjay-dutt-to-the-leo-set

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்டீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் ஏற்கனவே பல உச்ச நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் காஷ்மீர் படப்பிடிப்பு தளத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்திருக்கிறார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து தற்போது படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்துள்ள சஞ்சய் தத்தை தளபதி விஜய் அவர்கள் கட்டி அணைத்து வரவேற்கும் வீடியோவை படக்குழு ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் எஸ்கியூஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.