Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 68 படத்தின் ஷூட்டிங் குறித்து வெளியான அப்டேட். மகிழ்ச்சியில் ரசிகர்கள்

thalapathy vijay-went-to-south-korea

“லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.இப்படத்தில் 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் ‘லியோ’ படத்தின் ரிலீஸுக்கு பின் தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகும் என வெங்கட் பிரபு அண்மையில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், தளபதி 68 படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருவதாகவும் இதற்காக விஜய் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.”,

thalapathy vijay-went-to-south-korea
thalapathy vijay-went-to-south-korea