தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் தளபதி விஜய் சமீபத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு பரிசு பொருட்களை அளித்து ஊக்கப்படுத்தினார்.
தளபதி விஜயின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி ஈசிஆர் சரவணன் என்பவர் செய்த நலத்திட்ட உதவிகள் குறித்து அறிந்த விஜய் அவருக்கு தனது கைப்பட கடிதம் எழுதி நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் உங்களது செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். உங்களது செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.