Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 66 படத்தில் எத்தனை பாடல்கள் இடம் பெற உள்ளது தெரியுமா? இசையமைப்பாளர் வெளியிட்ட சூப்பர் தகவல்

Thaman About Thalapathy66 Movie Songs

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா என பலர் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர் பெற்றுக்கொண்டேன் இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறவுள்ளதாக உறுதி செய்துள்ளார். மேலும் ஒரு பாடலை இணைத்தாலும் இணைக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் இது முழுக்க முழுக்க எமோஷன்கள் நிறைந்த தமிழ் திரைப்படம் என தெரிவித்துள்ளார். விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.