Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எமோஷனல் காட்சிகளை பார்த்து இதயத்தில் இருந்து அழுதுவிட்டேன். இசையமைப்பாளர் தமன் போட்ட பதிவு

thaman-viral-tweet-about-varisu movie emotional-scenes

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். தீவிரமான விஜய் ரசிகரான இவர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் “வாரிசு” திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இவரது இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இன்று வெளியாகி உள்ள வாரிசு திரைப்படம் குறித்து உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், விஜய் அண்ணா, வாரிசு படத்தில் உள்ள எல்லாம் எமோஷனல் காட்சிகளையும் பார்த்து இதயத்தில் இருந்து அழுதுவிட்டேன், கண்ணீர் விலைமதிப்பற்றது, இப்படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. இப்படத்தில் பணியாற்ற வாய்ப்பு தந்த என் அன்பான விஜய் அண்ணாவுக்கு நன்றி லவ் யூ என்று நிகழ்ச்சி பொங்க பதிவை வெளியிட்டு இருக்கிறார்.