தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். இவர் கடந்த 11ஆம் தேதி தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இப்படம் பல இடங்களில் கலையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்று இருந்த ரஞ்சிதமே பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டம் போட வைத்து மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் ஒரு குழந்தை செய்த செயலை கண்டு வியப்புடன் தமன் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு குழந்தை அழகாக தூங்கிக் கொண்டிருந்த நிலையில் விஜய்யின் ரஞ்சிதமே பாடலை கேட்டவுடன் தூக்க கலக்கத்துடன் எழுந்து நின்று அழகாக டான்ஸ் அட தொடங்கி விட்டது அதனை பகிர்ந்த தமன் அத்துடன் ஐயோ பாவம் சோ க்யூட் என குறிப்பிட்டு ட்வீட் செய்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ எப்படி இருக்குன்னு நீங்களே சொல்லுங்க
Ayyoooo paavammmm 🥹❤️ So cute 🥰 https://t.co/r7sKyNvF3t
— thaman S (@MusicThaman) January 24, 2023