தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து முடிந்ததை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களாக பிக் பாஸ் சீசன் ஐந்தில் பங்கேற்ற தாமரைச்செல்வி கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தாடி பாலாஜி இங்கே இருக்கும் பொருட்களை சேதப்படுத்தினால் சம்பளத்திலிருந்து பிடிப்பார்கள் என கூற எனக்கு இன்னும் போன சீசன் சம்பளமே வந்து சேரல, அப்படி இருக்கையில் எப்படி பிடிப்பார்கள் என கூறியுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட தாடி பாலாஜி அதெல்லாம் வந்துவிடும் என அவரை சமாதானம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.