விய்காம் 18 தயாரிப்பில் ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்திக் ஜோதிகா மற்றும் சத்தியராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தம்பி’
வீட்டை விட்டு ஓடிய கோபக்கார ‘சரவணன்’ வருகைக்காக காத்திருக்கும் அக்கா ஜோதிகாவிற்கு போலியான தம்பியாக வருகிறார் கோவாவில் சின்ன சின்ன ஃபிராடு வேலைகளை செய்யும் கார்த்திக் அதற்கு ஆதரவாக கோவா காவல்துறை நபர் ஒருவர் துணை நிற்க கார்த்திக்கும் வீட்டிலுள்ள அனைவரையும் மெல்ல மெல்ல நம்ப வைக்கிறார். சரவணன் வருகையை பிடிக்காதவர் மூலம் சில கொலை முயற்சிகள் அரங்கேற அதன் பிடியில் பல உண்மைகள் வெளிவர போலி சரவணனின் நிலை என்னாயிற்று என்பதை சில திருப்பங்களுடன் முடிவதே மீதி கதை.
முதல் பாதியில் கார்த்திக் யின் கோவா காட்சிகள் கொஞ்சம் ரசிக்கும் படி இருந்தாலும் மேட்டுப்பாளையத்தில் நடக்கும் காதல் காட்சிகள் கொஞ்சம் சுமார் தான். காதலில் சொதப்பினாலும் அக்கா தம்பி பாசம் தப்பியது. அப்படி இப்படி என ஒரு வழியாக முதல் பாதி முடிய இரண்டாம் பாதியும் இப்படிதானோ என எண்ணிய பலர் மூக்கை உடைத்தார் இயக்குநர் பாவம் எளிதாக கண்டுபிடிக்க கூடிய காட்சியகங்கள் மற்றும் சோர்வுற்ற திரைக்கதை அவர் மூக்கையும் பதம் பார்த்தது. படத்தின் ஒளி ஒலி மிகவும் வலுவாக அமைந்ததால் மக்களும் நம் தம்பியை ஏற்றுக்கொள்வார்கள்.
பின் குறிப்பு – பல பாராட்டுக்கள் வாங்கி சீன மொழி வரை ரீமேக் செய்ய பட்ட படம் ‘திர்ஷ்யம்’. அந்த திரைப்படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் தான் இந்த திரைப்படத்தை யார் தலையீடு இல்லாமல் இயக்கினார் என்பதை நம்பிதான் ஆகவேண்டும்.
Rating – 2.5/5