“இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘தங்கலான்’ திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு ‘தங்கலான்’ படக்குழு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், \”உங்கள் கலைத்திறன் உண்மையிலேயே சினிமாவிற்கு கிடைத்த பரிசு\” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Happy birthday to the filmmaker who weaves art, power and social justice into every frame🔥
Many happy returns our dearest @beemji sir💙
Your artistry is truly a gift to cinema.Wishes from Team #Thangalaan#HBDPaRanjith #HappyBirthdayPaRanjith pic.twitter.com/qiTFYbuMOl
— Studio Green (@StudioGreen2) December 8, 2023