இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தங்கலான்’ திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தங்கலான்’ படத்தின் டப்பிங் பணியை நடிகை மாளவிகா மோகனன் தொடங்கியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள மாளவிகா, “எனக்கு படத் தயாரிப்பின் பயங்கரமான பகுதி டப்பிங் தான். நான் டப்பிங் செய்யும் பொழுது தயவு செய்து யாராவது வந்து எனது கையை பிடித்துக் கொள்ள முடியுமா?” என்று பதிவிட்டுள்ளார்.
Now for the most scary part of the filmmaking process for me..dubbing 🙈
(Can someone please come and hold my hand while I do it please? 🥺)#thangalaan pic.twitter.com/oM6Yt0BXiW— Malavika Mohanan (@MalavikaM_) November 29, 2023