Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தங்கலான் படம் குறித்து வெளியான தரமான தகவல், ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். திறமையான நடிகராக வலம் ஒருவர் தொடர்ந்து வித்தியாசம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பின் அடுத்ததாக தங்கலான் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக்கிய இந்த படத்தில் சியான் விக்ரமுடன் மாளவிகா மோகனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தை படக்குழு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படத்தின் முழு காபி ரெடி எனவும் ஜூலையில் சென்சார் பணிகள் முடிவடைந்து விடும். விரைவில் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பால் சியான் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.