Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

தங்கலான் திரை விமர்சனம்

Thangalaan Movie Review

அடிமைத்தனத்தில் இருந்து மீள தங்கத்தை தேடும் தங்கலானின் கதை

வேப்பூரில் கிராம மக்கள் ஜமீந்தார்களுக்கு அடிமையாக வாழ்ந்து அவர்கள் சொல்லும் வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால் சீயான் விக்ரம் மட்டும் அவரது சொந்த நிலத்தில் பயிற் வளர்த்து வருகிறார். இதுப்பிடிக்காத ஜமீந்தார் விக்ரமின் பயிற் நிலத்தை தீ வைத்து விடுகிறார். இதனால் ஆங்கிலேயர்களுக்கு அம்மக்கள் கட்ட வேண்டிய வரியை தான் கட்டிவிடுவதாகவும் பதிலுக்கு ஜமீனுக்கு அடிமையாக வேலை செய்ய சொல்கிறார்.

ஜமீன்தார்களின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைபெற ஆங்கிலேயர்களுக்கு தங்கத்தை கண்டுபிடிக்க முடிவு செய்கிறான் தங்கலான். இதனால் இவர்களின் மக்களை அழைத்துச் தங்கம் இருக்கும் இடத்திற்கு செல்கிறான். அந்த தங்கம் இருக்கும் இடத்தை பல காலங்களாக ஒரு அமானுஷ்ய சக்தி பாதுகாத்து வருகிறது. இந்த அமானுஷ்ய சக்தியின் பின்னணி என்ன? சூனியகாரிக்கும் விக்ரமிற்கும் என்ன தொடர்பு ? தங்கத்தை கண்டுப்பிடித்தார்களா இல்லையா? ஆங்கிலேயர்களிடம் இருந்து இவர்கள் எவ்வாறு மீண்டனர் என்பதே படத்தின் கதை.

சீயான் விக்ரம் நடிப்பை வார்த்தையால் சொல்ல முடியாது. இப்படத்திற்கு அவர் போட்டிற்கும் உழைப்பு அபாரம். இப்படத்தை அவரின் நடிப்பால் தோளில் சுமந்துள்ளார். பார்வதி நடிப்பில் மிரட்டியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர்களுக்கு இடையே இருக்கும் காதல் காட்சிகள் ரசிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது. ஆரத்தி கதாப்பாத்திரத்தில் மாளவிகா மோகனன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பசுபதி வழக்கம்போல் அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சீயானின் குடும்பமாக நடித்து இருக்கும் ப்ரீத்தி கரன், ஹரி கிருஷ்ணன், அர்ஜூன் அவர்களது வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

பா. ரஞ்சித் அடிமைத்தனத்தையும், நிலத்தின் அரசியலை வித்தியாசமான கதைக்களத்திலும் வித்தியாசமான பாணியிலும் சொல்ல முயற்சி செய்துள்ளார். இரண்டாம் பாதியில் கதை ஒரே இடத்தை மையப் படுத்தி இருப்பதால் திரைக்கதையில் தொய்வு ஏற்படுகிறது. படத்தின் லைவ் சவுண்ட் ஒரு பக்கம் பலமாக இருந்தாலும் அதுவே சில இடங்களில் வசனங்கள் புரியாமல் போகிறது. மேஜிக்கல் ரியலிசம் என்ற கதைக்களத்தில் பயணிக்கும் இப்படம் ஜெனெரல் ஆடியன்சிற்கு புரியாமல் போகிறது. க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரே நிகழ்ச்சி பகல் மற்றும் இரவாக மாறி மாறி வருவது சிறப்பான அனுபமவமாக இருந்தது.

ஜி.வி பிரகாஷின் இசை படத்திற்கு பெரிய பலம். காட்சிக்கு காட்சி மாறுப்பட்ட இசையை கொடுத்து திரையோட்டத்திற்கு பெரிய பலத்தை அளித்துள்ளார்.

கிஷோர் குமார் சிறப்பான ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். தங்கலான் உலகத்திற்கே நம்மளை அழைத்து செல்கிறார்.

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தங்கலான் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.”,

Thangalaan Movie Review
Thangalaan Movie Review