Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்!!

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த படம் தான் தனி ஒருவன்.

இப்படத்தை அதிகம் கொண்டடியதர்க்கு காரணம் படத்தின் கதைகளமும், மற்றும் அரவிந்த் சாமியின் சித்தார்த் அபிமன்யூ எனும் வில்லன் கதாபாத்திரமும் தான்.

மேலும் தனி ஒருவன் 2 குறித்து மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி இருவரும் வீடியோவை வெளியிட்டு அதிகாரப்பூர்வ தகவலை 2 வருடங்களுக்கு முன்னரே வெளியிட்டனர்.

ஆனால் தற்போது வரை அப்படதிற்கான எந்த ஒரு பணிகளும் இதுவரை துவங்கவில்லை. மேலும் கூடிய விரைவில் தனி ஒருவன் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க போகிறாராம். ஆனால் கால்சீட் பிரச்சனை ஏற்பட்டால் இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

ஆனால் சித்தார்த் அபிமன்யூ எனும் வில்லன் கதாபாத்திரத்தை இவர்களால் ஓவர்டேக் செய்ய முடியுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் இதனை குறித்து கூடிய விரைவில் படக்குழு விடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.