ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இங்கு ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் உள்ளார்கள். சிலர் காமெடி நடிகர் என்பதில் இருந்து ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்கள்.
அதற்கு தற்போதைய உதாரணம் என்றால் சந்தானம் தான். காமெடி நடிகராக அவர்கள் கொடிகட்டி பறந்த காலம் உள்ளது, எந்த படம் எடுத்தாலும் இவர் வந்துவிடுவார்.
இவரது காமெடிகளும் மக்களிடம் அதிகம் வைரலானது. இப்போது சந்தானம் ஹீரோவாக படங்கள் நடிக்க அதிலும் வெற்றிக்கண்டு வருகிறார்.
அப்படி காமெடி நடிகர்களில் கஞ்சா கருப்பும் பெரிய இடம் பிடிப்பார்.
பிதாமகன் படத்தில் அறிமுகமான இவர் பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலம் ஆனார். அடுத்தடுத்து படங்கள் நடித்துவந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துகொண்டார்.
படங்கள் நடித்து சந்தோஷமாக இருந்த கஞ்சா கருப்பு சினிமாவில் ஒரு பெரிய விஷயத்தில் நுழைய கடன், சொந்த வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதாவது கஞ்சா கருப்பு வேல்முருகன் போர்வெல் என்ற படத்தை தயாரிக்க அப்படம் படு தோல்வியை சந்தித்துள்ளது.
இதனால் அதிக கடன், வீட்டை விற்று கடும் சோகத்திற்கு ஆளாகியுள்ளார். இனிமேல் தான் படம் தயாரிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.